BIG BREAKING: நாளை ஸ்டிரைக்… சற்றுமுன் தமிழக அரசு புதிய அறிவிப்பு….!

Spread the love

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் நாளை பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத் திருத்தத்தின் மூலம் மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்கள் மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைமை, விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த அறப்போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்ற அடிப்படையில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று திமுக தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, நாளை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

7 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

17 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

25 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

33 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

36 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

41 minutes ago