Categories: சினிமா

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை.. ஆதரவாக குரல் கொடுத்த ஜி.வி பிரகாஷ் முன்னாள் மனைவி சைந்தவி..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிறகு இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்ட அறிக்கையில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும் அது என் ஒப்புதல் இல்லாமல் அவராக எடுத்தது என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன், அவர் விவாகரத்து விஷயமே எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார் எனவும் அவர் பாடகியை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார், இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்ப்ரிட்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். அந்தப் பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஈசிஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தன்னுடைய உடமைகளை ஒப்படைக்குமாறு அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்திருந்தார்.

இந்த விஷயம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில் நேற்று ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தைப் பற்றி பலர் பேசி வருகிறார்கள். உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது  எனது  பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமும் அல்ல என்பதை இங்கே வலியுறுத்துகிறேன். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த பதிவுக்கு குஷ்பு மற்றும் சைந்தவி ஆகியோர் கமெண்ட்  செய்துள்ளனர். அதில் பாடகியும், ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியான சைந்தவி “தைரியமாக இருங்கள் அக்கா. உங்களுக்காக என் பிராத்தனைகள்” என்றும், நடிகை குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” என்றும் ஆறுதல் கூறும் வகையில் கமெண்ட் செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“கூட்டணிக்கு ரெடி, ஆனா ஒரே ஒரு கண்டிஷன்”… முஷ்டியை முறுக்கிய காங்கிரஸ்… ராகுல் செயலால் ஆடிப்போன விஜய்… கசிந்த ரகசியத் தகவல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக்…

2 minutes ago

ஜெயலலிதாவுக்கு பின் விஜய் தான்… இதனை வருஷம் யாருமே செய்யல… 35 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஆச்சர்யம்..!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை…

7 minutes ago

“தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க”… அண்ணாமலை அன்றே கணித்த ‘கூட்டணி ஆட்சி’.. 2024-ல் சொன்னது 2026-ல் பலித்தது…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக திராவிடக்…

10 minutes ago

“யுத்தம் இன்னும் முடியல” பேச்சுவார்த்தையில் திடீர் முட்டுக்கட்டை… அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. உலக நாடுகளிடையே பதற்றம்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக ஈரானின்…

10 minutes ago

“எப்படியும் எடப்பாடி தான் முதல்வர்” கோட்டையில் அமரப்போவது தளபதியா.? இபிஎஸ்-ஆ..? லீமா ரோஸ் சொன்ன அந்த ‘திக் திக்’ ரகசியம்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை…

12 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்”…. ராகுல் – விஜய் ‘ஃபயர்’ ரகசியம்…. தவெகவிற்கு ஆதரவு கிடைச்சிடுச்சே…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக…

14 minutes ago