#image_title
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்ணனி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. பள்ளி படிப்பை முடித்த பின்பு மருத்துவத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்றார் சாய் பல்லவி. மருத்துவர் ஆனாலும் டான்சர் ஆக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது.
அதனால் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். கஸ்தூரிமான் தாம் தூம் போன்ற திரைப்படங்களில் பின்னணியில் சிறிய கதாபாத்திராத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. இது மட்டுமில்லாமல் சின்னத்திரை விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து நாயகியாக சினிமாவில் அறிமுகமானார் சாய்பல்லவி. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தை வைத்து சிறந்த பெண் அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றார்.
தமிழில் மாரி 2 பாவ கதைகள் போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி இணைந்து நடித்த அமரன் திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்பல்லவி தனது திருமணத்தை பற்றி பேசி இருக்கிறார்.
சாய் பல்லவி கூறியது என்னவென்றால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதில் நாட்டமும் இல்லை. எனது தங்கை திருமணம் சமீபத்தில் முடிந்தது. எனது தங்கையும் அவரது கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் விதமும் விட்டுக் கொடுக்கும் தான்மையும் பார்க்கும் பொழுது திருமண பந்தத்தில் இப்போதுதான் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய திருமணம் எப்போது நடக்கும் எப்படி நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அதை பற்றி நான் யோசிக்கவும் இல்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் சாய் பல்லவி.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…