கில்லியை போல மீண்டும் ஒரு நான்ஸ்டாலஜிக் படம் ரீ-ரிலீஸ்… தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!

By Soundarya on டிசம்பர் 28, 2024

Spread the love

2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தில் விஜய், ஜெனிலியா நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினத்தில் சச்சின் படத்தை மறு வெளியீடு செய்வதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. சமீபத்தில் விஜய் நடித்த கில்லி  திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றது.

#image_title

இப்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சச்சின் படத்தை தரம் உயர்த்தும் விதமாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் இயக்குனர் தாணு பேட்டி ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இப்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ற விதமாக சச்சின் படத்தை தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

   
   

 

மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு தாடி பாலாஜி, பிபாஷா பாசு, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.