தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஹீரோவாக்கி தொடர்ந்து படங்கள் இயக்கியும் தயாரித்தும் சப்போர்ட் செய்தார். அதனால் அவர் தன்னுடைய இயக்குனர் பணியைத் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கும் ஆளானார்.
ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் விஜய்யை எப்படியாவது சூப்பர் ஸ்டார் ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக வரிசையாக அவருக்காக கதைகள் கேட்க ஆரம்பித்து அவரை செதுக்கினார். விஜய்க்காக அவர் கதை கேட்பது சமீபத்தைய துப்பாக்கி படம் வரை தொடர்ந்தது.
இந்நிலையில் விஜய் மற்றும் எஸ் ஏ சி இருவர் பற்றியும் இயக்குனர் மு களஞ்சியம் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் கோயம்புத்தூர் மாப்ள படத்தில் உதவி இயக்குனர். அந்த படத்தில் ஒரு காட்சியை விஜிபியில் எடுக்க திட்டமிட்டோம். அப்போது சங்கவிக்குத் தங்க ரூம் போட்டு தங்கவைத்தனர். ஆனால் விஜய்க்கு ரூம் போடவில்லை. சாலையிலேயே வைத்து மேக்கப் போட்டுள்ளனர்.
மேக்கப் மேன் ஏதோ வத்தி வைக்க, விஜய் பாதியிலேயே காரை எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்களுக்கெல்லாம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் விஜய்யை அழைத்துக் கொண்டு எஸ் ஏ சி சார் வந்தார். அப்போது எல்லோர் முன்னாலும் விஜய்யை அறைந்துவிட்டார். நாங்கள் எல்லாம் ஸ்தம்பித்துவிட்டோம்.
அப்போது விஜ்ய்யிடம் ‘உனக்கு அவங்க ரூம் போடலன்னா, அத மனசுக்குள்ளயே வைராக்கியமா வச்சிகிட்டு, அந்த லெவலுக்கு வளரனும்னு நெனைக்காம, இப்படிதான் ஸ்பாட்ட விட்டு ஓடிவருவியா?’ எனக் கேட்டார். அப்படியே இயக்குனர் பக்கம் திரும்பி “ஒரு நடிகன அவன் ஈகோ பாதிக்கப்படாதவாறு வச்சுக்க தெரியாம நீயெல்லாம் என்னய்யா டைரக்டர்” என திட்டிவிட்டு போய்விட்டார். அதன் பிறகு விஜய் எதுவுமே நடக்காத மாதிரி நடித்தார்” எனக் கூறியுள்ளார்.