தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மிஷ்கின். இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவருடைய இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு. இந்த மிரட்டலான திரைப்படம் வெளியாகி சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தத் திரைப்படத்தில் ராதாரவி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டிய ராதா ரவி பிசாசு திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தார்.

இந்த நிலையில் பிசாசு படத்தில் எப்படி ராதாரவி தேர்வு செய்தீர்கள் என்று youtube சேனல் பேட்டியில் இயக்குனர் மிஸ்கின் இடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எல்லோருமே சொன்னார்கள் நல்ல அப்பா கதாபாத்திரத்திற்கு எப்படி ராதாரவியை போட முடியும் என கேட்டார்கள். ஏன் ராதாரவியை போடக்கூடாதா நல்ல அப்பா கதாபாத்திரத்திற்கு, அவர் உனக்கு என்ன செய்தார். படத்தில் ரேப், கலாட்டா மற்றும் ரவுடித்தனம் செய்தார்.

அவரை நான் அழைத்துப் பேசும்போது தந்தை, தந்தை என்று மட்டும் தான் சொன்னேன். நான்கு நாட்கள் சூட்டிங் எடுத்தோம். எந்த ஒரு டயலாக்கும் கொடுக்கவே இல்லை. சும்மா படுத்து இருக்கும் சீன். அவருக்கு புரியவே இல்லை. தவறான படத்திற்கு வந்து விட்டோம் என்று நினைத்தார். பிறகு போக போக தான் தெரிந்தது. கடைசி ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஐசில் அமர்ந்திருந்தார். அந்த சீன் எல்லாம் ரொம்ப கஷ்டம் என்று மிஸ்கின் பேசியுள்ளார்.
