‘சாட்டை’ பட ஹீரோவுக்கு திருமணம் முடிந்தது.. இவர் தான் மணப்பெண்ணா…? வைரலாகும் திருமண புகைப்படங்கள்….

By Begam

Updated on:

இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் 2002ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சாட்டை’. இந்த படத்தில் சமுத்திர கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் காதலையும், அந்த பருவத்தில் மாணவர்களின் மனதில் எழும் குழப்பங்களையும்  திருத்தி, நல்வழிப்படுத்தும் ஆசிரியராக சமுத்திரக்கனியும் நடித்து அசத்தியிருந்தனர்.

   

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருந்தது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிகர் யுவன். அவர் இந்த படத்திற்கு பின்னர் இளமை,  அய்யனார் வீதி, கமர்கட்டு,  அடுத்த சாட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நடிகர் யுவன் அவர்களின் உண்மையான பெயர் அஜ்மல் கான். இவரின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர்.  இவரும் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் யுவன், தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானியை திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது . கோலாகலமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இத்திருமணம் தொடர்பான புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.