தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் போது பல அவமானங்களை சந்தித்த விஜய் இன்று சினிமாவே வியக்கும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் உழைப்பும்தான். தன்னுடைய மகன் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். விஜய் தன்னுடைய அயராத உழைப்பால் இன்று சினிமாவில் வளர்ந்து நிற்கின்றார். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தத் திரைப்படம் தான் விஜயின் திரை வாழ்க்கையில் கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலக உள்ளார். சமீபத்தில் கூட விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை பிரமாண்டமாக விஜய் நடத்தி முடித்தார். அந்த மாநாட்டில் விஜய் தன்னுடைய அம்மாவிடம் ஆசி பெற்ற நிலையில் அப்பாவை கண்டுக்காமல் சென்றது தொடர்பாக பல வதந்திகள் எழுந்தது.

அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் அதனால் பேசிக்கொள்ளாமல் வெறுப்புடன் இருப்பதாகவும் பல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், நானும் விஜய்யும் பேசிக் கொள்வதே மிகவும் குறைவு தான். என்ன சாப்டியா காலேஜ்ல இருந்து வந்துட்டியா என்பதுதான் எங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய பேச்சாக இருக்கும்.

இப்போதான் எல்லாரும் அந்த மாதிரி பாக்குறாங்க. ஆனா உண்மையிலேயே அவரும் கம்மியா தான் பேசுவாரு நானும் கம்மியா தான் பேசுவேன். நானும் சினிமாவில் வளர்ந்தேன் அவரும் என்ன விட பெருசா சினிமாவில் வளர்ந்துட்டாரு. ஒரு கட்டத்தில் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறாங்க. அம்மாவுக்கு கை கொடுக்கிறார் அப்பாவுக்கு ஏன் கை கொடுக்கல ரெண்டு பேருக்கும் சண்டையா, இருவரும் கத்தி எடுத்துக்கொண்டு சண்டையை போடுவது போல அவங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டாங்க.

ஆனா நாங்க எப்பவுமே அப்படிதான். விஜய் படிக்கும்போதும் சரி நடிக்க வரும்போதும் சரி நான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். எல்லோரும் என்ன மிலிட்டரி என்று தான் சொல்லுவாங்க. என்னோட உதவி இயக்குனர்களிடம் எப்படி ஸ்ட்ரிக்டா இருப்பேனோ அது மாதிரி தான் விஜய் கிட்டயும் இருப்பேன். என் மகனை எப்படி எல்லாம் வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தாயோ அதனை நோக்கி பயணித்ததால் அப்படியே நடந்து விட்டது. ஆனா நான் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் இது மாதிரி எல்லாம் நீ வரவேண்டும் என்று ஒரு நாள் கூட அவரை அமர வைத்து நான் பேசியது கிடையாது என்று எஸ் ஏ சந்திரசேகர் மனம் திறந்து பேசி உள்ளார்.
