ரஜினி மற்றும் கமல் ஆகியோர் சூப்பர் ஸ்டார்களாக உருவாகியதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவர் எஸ் பி முத்துராமன். ரஜினிக்கு முரட்டுக் காளை மற்றும் கமலுக்கு சகலகலா வல்லவன் என ப்ளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுத்து அவர்களின் கமர்ஷியல் வெற்றியை தொடங்கி வைத்தார்.
தன்னுடைய ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் அதிகமாக இணைந்து வெற்றி படங்கள் கொடுத்தது இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில்தான். அவர்கள் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் பாணியில் அமைந்தன. அதில் உச்சம் தொட்டது முரட்டுக் காளை திரைப்படம். இருவரும் இணைந்து 25 படங்கள் பணிபுரிந்துள்ளனர்.
அதே போல கமல்ஹாசனும் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தான் எந்த படத்தை இயக்கினாலும் அதை கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் எஸ் பி முத்துராமன். அப்படி ஒரு சம்பவம் சகலகலா வல்லவன் திரைப்படத்துக்கும் நடந்துள்ளது.
சகலகலா வல்லவன் படத்துக்காக 5 பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளார் இளையராஜா. ஆடியோ கேசட்டில் இரண்டு பக்கமும் மூன்று மூன்று பாடல்கள் பதிவு செய்யும் விதமாக இன்னும் ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஏவிஎம் நிறுவனம் கேட்டுள்ளது. அதற்கு இளையராஜா டைட்டில் பாடல் என்றால் பக்தி பாடல்போலதான் தருவேன் எனக் கூறியுள்ளார்.
அப்படி அவர் உருவாக்கியதுதான் அம்மன் கோவில் கிழக்காலே பாடல். ஆனால் அந்த பாடலை படமாக்கும்போது எஸ் பி முத்துராமன். அழகான கிராமத்து நாட்டுப்புற பாடல் போலவும், அதில் ஒரு காதல் ஜோடியை இணைத்து டூயட் போலவும் மாற்றிவிட்டார். இது படத்துக்கு பாசிட்டிவ்வான அம்சமாக அமைந்து விட்டது.
அந்த டைட்டில் பாடலைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காட்சிகளுக்கு முன்கூட்டியே செல்வதும் நடந்துள்ளது.
