‘எனக்கு அந்த நோய் இருக்கு’…! மார்க் ஆண்டனி success meet ல் உண்மையை உடைத்த S J சூர்யா… 

By Begam on புரட்டாதி 22, 2023

Spread the love

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மார்க் ஆண்டனி. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால்.

   

இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ‘பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேக்குதா’ என்கிற காட்சிகள் மற்றும் பேருந்தில் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் எஸ் ஜே சூர்யா ஆளே மாறி நடிக்கும் நடிப்பு எல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை நடிப்பு அரக்கன் என பாராட்டி வருகின்றனர்.

   

 

சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி, முதல் நாளிலேயே 6.50 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூல் வேட்டை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் success meet நடைபெற்றது. இதில் திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய S J சூர்யா’ மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தை பார்த்து கவலையை மறந்து சிரித்தோம் என கூறும்போது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், இப்படத்திற்காக தாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போய் விட்டதாகவும், மேலும் தனக்கு OCD பிரச்சனை இருப்பதாகவும் ‘ கூறினார். இதோ அந்த வீடியோ…

https://www.youtube.com/shorts/vVUCkJGYkaQ