விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரும், செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு மதுபோதையில் கணவர் தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வாசக தேவி, அவரைப் பிரிந்து செவல்பட்டியில் உள்ள தனது தாய் சாந்தியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மதுபோதையில் மாமியார் வீட்டிற்குச் சென்ற சிவா, தனது மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட தகராறில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் சாந்தியையும், மைத்துனர் சாமி முருகனையும் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த 55 வயதுடைய சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த சாமி முருகன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த சூலக்கரை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தலைமறைவாக இருந்த சிவாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…
சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத்…
தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…