“எங்களை கேள்வி கேட்காதீங்க”….. கீவ் நகரில் உக்ரைன் அமைச்சரை வாயடைக்க வைத்த இந்திய தூதர்…. அரண்டுபோன உலக நாடுகள்….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அம்மாநில அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த உக்ரைனின் கவலைகளை ஜெய்சங்கர் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்தியாவின் சொந்த எரிசக்தித் தேவைகளையும் அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய ஜெய்சங்கர், “உக்ரைனின் கேள்விகளுக்கான காரணத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், உலகளாவிய எரிசக்தி நிலைமை கடினமாக இருக்கும் இக்காலத்தில், 140 கோடி மக்களுக்கு எரிசக்தியை வழங்குவதில் உள்ள சவால்களைப் புரிந்துகொள்வது அவசியம்” எனக் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனின் நிலைப்பாட்டை இந்தியா மதிப்பதைப் போல, இந்தியாவின் கண்ணோட்டமும் உலக நாடுகளால் மதிக்கப்படும் என நம்புவதாகக் கூறிய அவர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் மட்டுமே இந்தப் போர் நீடிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

   

தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், “இன்று ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள இந்த மோதலானது யாரோ ஒருவர் எண்ணெய், கனிமங்கள் அல்லது உரங்களை வாங்குவதால் மட்டும் தீர்ந்துவிடாது. போர்க்களத்தில் இருந்து தீர்வுகள் உருவாகாது என்றும், இது போருக்கான நேரம் அல்ல என்றும் இந்தியா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், நீடித்துக்கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர உரையாடல், ராஜதந்திர அணுகுமுறை மற்றும் சமரசம் ஆகியவையே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார்.

   

சமீபத்தில் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களை ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார். நீண்டகாலப் போருக்குப் பதிலாக, உடனடியாக விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், அமைதியை மீட்டெடுக்கக் கூடிய பேச்சுவார்த்தைகளுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.