நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகளா..? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி.. உண்மை என்ன..!!

By admin on வைகாசி 28, 2024

Spread the love

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜயை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரட்டை குழந்தைக்கு தாயாகிய நடிகை அமலா பால். - தமிழ் News - IndiaGlitz.com

   

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பிறகு ஏ.எல் விஜய். விஜய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலாபால் ரத்னா குமார் இயக்கிய ஆடை திரைப்படத்தின் நிர்வாணமாக நடித்த பரபரப்பை ஏற்படுத்தினார்.

   

காதலர் ஜகத் தேசாய் உடன் அமலா பால் திருமணம்; புகைப்படங்கள் வைரல்

 

கடந்த ஆண்டு தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். சமீபத்தில் பிரித்திவிராஜ் ஜோடியாக அமலாபால் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால்.. கையில் குழந்தையுடன் வெளியிட்ட  புகைப்படம்

நேற்று மாலை முதல் அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக செய்திகள் உலா வருகிறது. இதனால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இன்னும் அமலாபாலுக்கு குழந்தை பிறக்கவில்லையாம். இதன் மூலம் அமலாபாலுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக பரவி வரும் செய்தி உண்மை இல்லை என்பது தெரியவருகிறது.

Actress Amala Paul : நிறைமாத நிலவாக ஜொலிக்கும் அமலா பால்.. வாழ்த்து மழையில்  நனைக்கும் ரசிகர்கள் - லேட்டஸ்ட் போட்டோஸ்!