லூதியானா தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ராஜிந்தர்பால் கவுர் சினா, தனது தொகுதியில் லாரி ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாடற்ற முறையில் லாரியை இயக்கியதாகக் கூறி, அவரைத் தடுத்து நிறுத்திய எம்.எல்.ஏ ஓட்டுநரைக் கன்னத்தில் அறைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்து விதிகளை மீறிய லாரி ஓட்டுநரைத் தான் தாக்கவும் இல்லை என்றும், அவரைப் பிடித்துக் காவல் துறையிடம் மட்டுமே ஒப்படைத்ததாகவும் சினா விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்துப் பேசிய லாரி ஓட்டுநர், எம்.எல்.ஏ தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்து தாம் கீழே இறங்கியதும் கன்னத்தில் அறைந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் சினா, இந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதாகவும், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருக்கவே அதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், லாரி ஓட்டுநர் பின்னர் தன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2099844019136385484/video/1
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த லாரி ஓட்டுநருக்குத் தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் விதித்து, பின்னர் அவரை விடுவித்தனர். அதேவேளையில், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…