தலைகீழாக மாறும் விதி..! 2 ஆண்டுகளுக்கு பின் ருச்சக ராஜயோகம்.. செவ்வாய் பகவானின் ஆசியால் ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!

By Swetha on வைகாசி 19, 2026

Spread the love

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் பகவான், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் கடந்த மே 11 ஆம் தேதி குடிபுகுந்துள்ளார். வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை அவர் இதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார். செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக உச்சகட்ட அதிர்ஷ்டத்தையும், ‘ருச்சக ராஜயோகத்தையும்’ வாரி வழங்கவுள்ளது.

இந்த பெயர்ச்சியால் மிதுன ராசியினரின் 11 ஆவது வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாவதால், அவர்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அசுர வளர்ச்சி உண்டாகும். தொழில் துறையில் அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட காலத்தை அனுபவிப்பதோடு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்று, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

   

அதேபோல், கடகம் மற்றும் மகர ராசியினருக்கும் இந்த பெயர்ச்சி அமோக நன்மைகளைத் தரவுள்ளது. கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டு தன்னம்பிக்கை இருமடங்காகும்; புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும், நிதி ரீதியான பாரிய ஏற்றமும் உண்டாகும். மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் பொருளாதார நிலை மேம்பட்டு, குடும்பத்தின் ஆதரவோடு புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்.