Categories: சினிமா

விருமாண்டி படத்தை எடுக்கவே விடல.. எல்லாமே உல்டாவா நடந்துச்சு.. பிரபலம் சொன்ன தகவல்..!!

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு விருமாண்டி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கமல்ஹாசனே எழுதி இயக்கியிருந்தார். அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில் ஆர்.எஸ் சிவாஜி ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, விருமாண்டி படத்துக்கு முதல்ல சண்டியர் என்று தான் பெயர் வைத்தோம். அந்த படத்தை பொருத்தவரைக்கும் எங்க ஷூட் பண்ணாலும் தகராறு பண்ணாங்க. படத்தை எடுக்கவே விடல. நாங்க ஃபுல்லா கிரவுண்ட் ஒர்க் தான் பாத்துட்டு இருந்தோம். கடைசில கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் குள்ள மதராஸா இடத்தில் ஷூட்டிங் பண்ணனும்.

படத்த நாங்க ரிவர்ஸ்ல இருந்து தான் எடுத்தோம். ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் இங்கு ஒரு செட்டு போடும்போது அடுத்த இடத்தில் செட் போடுவாரு. இப்படி மாத்தி மாத்தி எல்லாமே உல்டாவா பண்ணி தான் படத்தை எடுத்தோம். ஜல்லிக்கட்டு அந்தந்த ஆளுங்கள வர வச்சு செட்டு போட்டு எடுத்தோம். விருமாண்டி நாங்க ஃபர்ஸ்ட் லைவ் சவுண்ட் ஷூட் பண்ணும் போது காலைல ஒரு சீன் சூட் பண்ணி முடிச்சிட்டோம். அந்த ஜெயில் சீன் பார்த்தால் சவுண்ட் ரெக்கார்ட் ஆகவே இல்ல.

அதுக்கப்புறம் திருப்பி மத்தியானம் அதே சீன் ஷூட் பண்ணாரு. அதுக்கு அவருக்கு கோபம் வரல. அதுக்கப்புறம் வந்து ஏதோ கூப்பிட்டு எக்யூப்மென்ட் எல்லாம் மாத்தி மத்தியானம் திருப்பி அதே ரோகினி, பசுபதி, கமல் சார் சீன் நாங்க திருப்பி சூட் பண்ணினோம். கமல் சார் கூட இருந்து ஒர்க் பண்ணியது என்னோட பாக்கியம். அவர் கூட உட்கார்ந்து செட்யூல் பண்றது எல்லாம் பெரிய விஷயம் என பேசி உள்ளார்.

admin

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

37 minutes ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

46 minutes ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

49 minutes ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

1 மணத்தியாலம் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

1 மணத்தியாலம் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

1 மணத்தியாலம் ago