வடசென்னையில் அதிமுகவின் வலுவான முகமாகத் திகழ்ந்த ஆர்.எஸ். ராஜேஷ், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகிய அவரைத் தங்கள் பக்கம் இழுக்க, ஆளுங்கட்சியான திமுக சார்பில் அமைச்சர் சேகர் பாபு தரப்பில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் அதிமுகவில் இருவரும் ஒன்றாகப் பயணித்த நட்பு இருந்தபோதிலும், திமுகவின் அழைப்பை நிராகரித்த ராஜேஷ் தவெகவில் இணையவே விருப்பம் காட்டியுள்ளார். ஆளுங்கட்சியின் அழைப்பையும் கடந்து அவர் எடுத்துள்ள இந்த முடிவு, வடசென்னை அரசியல் களத்திலும் தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகளிலும் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
