மாநகராட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் தனது ஒருபக்க மீசையை மழித்துக் கொள்வதாக சவால் விடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இசிஆரில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றிய அவர், “தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ஆர்.எஸ்.பாரதி தனது சவாலை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்ததுடன், இந்தியாவின் 100வது சுதந்திர தின விழாவின்போது தவெக தலைவர் விஜய் தான் தமிழக முதலமைச்சராகத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றுவார் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
