ஒரு மகள் தனது தந்தை மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றி, காதலனுடன் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, தனது தந்தையிடம் ரூ. 12 லட்சம் பணம் கேட்டு பெற்றுள்ளாள். அந்த பணத்தை வாங்கிய அதே இரவில், வீட்டில் இருந்த தாயின் நகைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு, தான் காதலித்த இளைஞனுடன் இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளாள்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தன்னைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதால், தனது சொந்த விருப்பத்தின் பேரில் காதலனைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர்கள் தன்னைத் தேட முயற்சித்தால் அல்லது காவலர்களிடம் புகார் அளித்தால், அவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுவேன் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
குடும்பத்தினர் அவளது எதிர்காலத்திற்காகச் சேர்த்த பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதுடன், வளர்த்த பெற்றோரையே சிறைக்கு அனுப்புவேன் என்று மிரட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் இந்த ஏமாற்று வேலையாலும் மிரட்டலாலும் நிலைகுலைந்து போன பெற்றோர், காவல்துறையை அணுகி நீதி கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
