“யார தூக்க பாக்குறீங்க….. 19 மாசம் ஜெயிலுக்கு போனவருப்பா”…. தவெக அரசை அலறவிட்ட RS பாரதி…. கொங்கு மண்டலத்தில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்படும் வழக்குகள் அனைத்தும் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை ஒருபோதும் வீழ்த்திவிட முடியாது என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக), பதவியேற்ற நாளில் இருந்தே செந்தில் பாலாஜி மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மற்றும் டாஸ்மாக் முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டிய நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையும் முன்ஜாமீனும் பெற்றுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு உயர முக்கியக் காரணமாக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி என்பதால் தான் தவெக அரசு அவரைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், “செந்தில் பாலாஜி ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்து பழக்கப்பட்டவர். பொய்யான வழக்குகளைப் போட்டு திமுகவை அழித்துவிடலாம் என்று நினைப்பது அறியாமை. 2001-இல் கலைஞர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்ட சம்பவத்தையே பார்த்த கட்சி திமுக. அன்றைக்குக் கூட வலுவான ஒரு எஃப்.ஐ.ஆர் போட முடியவில்லை. தவெக அரசு வெறும் ஊடகச் செய்திகளுக்காக மட்டுமே இத்தகைய பொய் வழக்குகளைப் புனைந்து வருகிறது” என்று விமர்சித்தார்.

   

தொடர்ந்து தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைச் சாடிய அவர், தமிழ்நாட்டில் ஒரு அரசு நடப்பதற்கான அடையாளமே தெரியவில்லை என்று சாடினார். “மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் எனப் பல்வேறு முக்கியச் சிக்கல்கள் மாநிலத்தை உலுக்கி வரும் நிலையில், அதைப் பற்றி அரசோ அல்லது முதல்வர் விஜய்யோ ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காக்கின்றனர். முதல்வர் கர்நாடகா பயணம் மேற்கொள்ள இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அது குறித்துக்கூட எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

   

அரசின் மின்சாரக் கொள்கை மற்றும் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாகச் சாடிய ஆர்.எஸ்.பாரதி, மாநிலம் முழுவதும் தலைதூக்கியுள்ள மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பொறுப்பான அமைச்சரால் பதில் சொல்ல முடியாமல் திணறி வருவதாகக் கூறினார். அளவுக்கு அதிகமான மின் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் தவெக அரசு மக்களிடம் இருந்து பணத்தைச் சுரண்டுவதாகவும், இதுவும் ஒரு வகையான மாபெரும் மோசடியே என்றும் கடுமையாகச் சாடினார்.