இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவர்களுக்காக போஸ்ட் ஆபீஸ் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உத்தரவாத வருமானம் தரக்கூடியது என்பதால் முதலீடு செய்யும் தொகையும் பாதுகாப்பாக இருக்கும். தங்களுடைய ஓய்வு காலத்திற்குப் பிறகு யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கும் நிம்மதியான எதிர்கால வாழ்வுக்கும் அனைவரும் சேமிக்க வேண்டியது அவசியமாகும். ஒருவர் 1000 கிலோ அல்லது லட்சத்திலோ சம்பாதித்தாலும் அதில் ஒரு பகுதியை சேமித்து வைப்பது அவசியம். இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மக்களுக்காக பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாதாந்திர வருமானம் தரக்கூடிய திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்தால் போதும். அதன்மூலம் கிடைக்கக்கூடிய வட்டியை பொறுத்து மாதாந்திர வருமானம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இதில் ஒரே நேரத்தில் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது மாதம் தோறும் ரூ.9,250 வருமானமாக கிடைக்கும். இதனை தம்பதியாக இணைந்தும் டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்படி செய்தால் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

இதன் மூலமும் அதே தொகையை மாத வருமானமாக பெற முடியும். மேலும் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தோம் இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம். தபால் நிலையங்களில் மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் ஓய்வுக்கு பின்னர் வருமானத்தை இழக்காமல் இருக்கலாம். பிறகு நிலையான வைப்பு திட்டங்களை விட மாதாந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டியும் வழங்கப்படுகின்றது.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் உதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதனை முதலீட்டாளர் விரும்பினால் 15 வருடங்கள் ஆகவும் நீட்டித்துக் கொள்ளலாம். முன்கூட்டியே கணக்கை மூடும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. அத்துடன் ஒரு வருடம் கழித்து இந்த திட்டத்தின் பணத்தை எடுக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால் இரண்டு சதவீதம் அபராதமாக டெபாசிட் செய்த தொகையிலிருந்து செலுத்த வேண்டி இருக்கும். மாதாந்திர வருமான திட்டத்தில் நிரந்தரம் மற்றும் உறுதியான வருமானம் கிடைப்பதால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இது கட்டாயம் இருக்கும்.
