2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த 5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.

#image_title
இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

#image_title
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோ லாஞ்சு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) காலமானார். அதாவது அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள தனது குடியிருப்பில் அவர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

#image_title
மரணத்துக்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. மேலும் அவரது மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் இவருடைய இறப்பு கங்குவா படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
