நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கந்துவட்டிக்கு கடன் வாங்கிய ஏழை தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்களைத் திருடி வருவதாக புகார் எழுந்துள்ளது. தி.மு.கவை சேர்ந்த ஆனந்த் என்பவர், ரூபாய் 5 முதல் 10 லட்சம் பணம் தருவதாக பேரம் பேசி ஏழை மக்களின் சிறுநீரகங்களைத் திருடிய புகாரின் பெயரில் தலைமறைவாகியுள்ளார்.
முறைகேடாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்காக, திருச்சி சித்தார் மருத்துவமனைக்கும், பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், தமிழக அரசு உரிமத்தை ரத்து செய்துள்ளது. ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை உரிமையாளரான ஸ்ரீனிவாசனின் மகன் கதிரவன், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏவாக உள்ளார். தன் தொகுதியில், மக்களுக்கு விருந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, நிர்வாகி ஒருவர் கிட்னி ஆபரேஷன் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவர் காசு கம்மியாக இருந்தால், கிட்னியை எடுத்து விடுவோம் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். திருச்சி மருத்துவமனையில், சட்டவிரோத கிட்னி அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் ரூ. 14.5 கோடியுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், திமுக எம்.எல்.ஏ கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், சட்டவிரோதமான சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை, ரோல்ஸ் ராய்ஸ் ரூ. 14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசுகிறார். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதற்கு, திருப்பட்டூரில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கிட்னியையும் திருட வேண்டும் என்கிறார். இது நகைச்சுவை அல்ல. நாமக்கலை சேர்ந்த ஏழை நெசவாளர்களின் ஏமாற்றி, சிறுநீரகங்கள் திருடப்பட்டன. மேலும் இந்த வர்த்தகத்தில் குறைந்து, 7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏவே ஒப்புக்கொண்டார். ஆனாலும் தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில், இடையில் தரகராக செயல்பட்டு திராவிட ஆனந்த் கைது செய்யப்பட்டாரா? என கேள்வி முன்வைத்தார்.
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…