மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! வங்கிக்கணக்கில் ரூ.6000 வந்தது… தமிழக அரசின் கூடுதல் சர்பிரைஸ்…!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களுக்கு, பிப்ரவரி 13-ம் தேதியன்று பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகையான ₹3,000 முன்பணமாக வழங்கப்பட்டது. அத்துடன் ‘கோடைகால சிறப்புத் தொகை’யாக கூடுதலாக ₹2,000 என மொத்தம் ₹5,000 ஒரே தவணையாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் காலங்களில் எவ்விதத் தடையுமின்றி நிதி சென்றடைவதை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (மார்ச் 3) சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் சுமார் 37 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்துள்ளார். முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதிய திருநங்கையர் ஆகியோருக்கு மார்ச் மாத ஓய்வூதியத்துடன் கூடுதலாக ₹2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோர் மற்றும் கைம்பெண்களின் வங்கிக் கணக்கில் ₹3,200-ம், மாற்றுத் திறனாளிகளுக்கு ₹3,500 முதல் ₹4,000 வரையிலும் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.