தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்ரவரி 13, 2026) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பயனாளிகளுக்கு தலா ரூ. 5,000 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்) மகளிர் உரிமைத் தொகையை வழங்க விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கப் பார்ப்பதாக முதல்வர் குற்றம் சாட்டினார். இந்தத் தடையை முறியடிக்கவும், பெண்களுக்குத் தங்குதடையின்றி நிதி சென்றடையவும் அரசு முன்கூட்டியே இந்தத் தொகையை வழங்கியுள்ளது.
பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ. 1,000 வீதம் மொத்தம் ரூ. 3,000. மகளிருக்குக் கூடுதல் உதவியாக ரூ. 2,000 சிறப்பு நிதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்போடு சேர்த்து, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் (திராவிட மாடல் 2.0), தற்போது வழங்கப்படும் மாதந்திர உரிமைத் தொகையான ரூ. 1,000-ஐ ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற மாபெரும் தேர்தல் வாக்குறுதியையும் முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
