தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம், தொடங்க உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் 2025 – 2026 நிதியாண்டில், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் கிளவுட் கட்டமைப்பு செலவுகளை குறைப்பதன் மூலம், ஸ்டார்ட் அப்களை விரைவாக அளவிடவும், எளிதான புதுமைகளை உருவாக்கவும் தொடங்கப்பட உள்ளது. 5 லட்சம் என 3 ஆண்டுகளுக்கு 15 லட்சம் வரை கிளவுட் சேவை தொகை அந்த நிறுவனத்திற்கு திருப்பித் தரப்படும். அமேசான் வெப் சர்வீஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற கிளவுட் நிறுவனங்களிடமிருந்து கிளவுட் சேவை தள்ளுபடியில் வழங்கப்படும்.
மொத்த செலவு – 10 கோடி
தகுதி – StartUpTN, iTNT Hub மற்றும் ELCOT–STPI FinBlue ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள். இந்தத் திட்டம் இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு, மிகவும் உகந்த தமிழ்நாட்டில் நிலையை வலுப்படுத்துகிறது.
