தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் தேர்தல் வாக்குறுதியை விரைவில் செயல்படுத்துமாறு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிகிரி முடித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 மற்றும் டிப்ளமோ தகுதி உடையவர்களுக்கு ₹2,500 நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டத்தின் கீழ் சுமார் 69,000 பயனாளிகள் மாதந்தோறும் ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை பெற்று வரும் நிலையில், புதிய உத்தரவின் மூலம் இந்த தொகை கணிசமாக உயர்த்தப்பட்டு விரைவில் அமலுக்கு வரவுள்ளது வேலையற்ற தமிழக இளைஞர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
