இனி 12 இல்ல 9 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்… சிலிண்டர் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஷாக் நியூஸ்…!

By Divyamayakannan on ஆவணி 11, 2025

Spread the love

மத்தியஅரசு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தை 2025-26 நிதியாண்டு வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் சுமார் 60% இறக்குமதியாக உள்ளது. அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்கத் தொடங்கிய போது வருடத்திற்கு 12 ரீஃபில்கள் கிடைத்தது. தற்போது ரூ.300 ஆக உயர்த்தி வருடத்திற்கு 9 ரீஃபில்கள் மட்டுமே தரப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டு எல்பிஜி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால்.

இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, 2019-20 இல் ஒருவருக்கு சராசரியாக 3 ரீஃபில்கள் கொடுக்கப்பட்டது.2022-23ல் 3.68 ஆகவும், 2024-25ல் 4.47 உயர்ந்துள்ளது இதனால் எரிவாயு பயன் தொடர்ந்து அதிகரித்ததால். புகையால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் குறைந்துள்ளன.

   

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் மே 2016 இல் தொடங்கப்பட்டது. முன்பணம் இல்லாமல் வழங்கப்பட்ட எரிவாயு 2025 ஜூலை 1ம் தேதி அளவில் நாடு முழுவதும் 10.33 கோடி இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய், DGCC புத்தகம் மற்றும் நிறுவும் செலவுகள் மற்றும் ரீஃபில்கள்,அடுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது. அத்தனை செலவுகளையும் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் பல ஏழை குடும்பங்கள் பொருளாதாரச் சுமையின்றி எல்பிஜி பயன்படுத்தி வருகின்றன.