மக்களுக்காக அஞ்சலகத்தில் சிறப்பான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் வைப்பு நிதி (RD) இத்திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1500 கட்டினால் ஐந்தாண்டு முடிவில் ஒரு தொகையை வட்டியுடன் சேர்த்தும் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் ஏழை எளியோருக்கு ஒரு சிறப்பான திட்டமாக இருக்கும்.
திட்டத்தைப் பற்றியும் முழு விவரம் அறிந்து கொள்ளலாம். நிலையான மாதாந்திர வைப்புத் தொகையை செலுத்தி எனும் திட்டத்தில் தினமும் ரூபாய் 50 அடிப்படையில் மாதம் ரூபாய் 1500 கட்டினால் ஐந்து ஆண்டு முடிவில் 6.7% வட்டி உடன் 1,07,050 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இதுபோல 100.ரூ விதத்தில் சேமித்து வந்தால் 2,12,972.ரூ பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்திற்கு சென்று இத்திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்துக்கொண்டு திட்டத்தில் இணைந்து பணத்தை சேமியுங்கள்.
இதேபோல் வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர வருமான திட்டம், தொடர் வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் நேரா வைப்பு கணக்கு போன்ற பல சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. மேலும் இதைப்பற்றி விவரங்களுக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்திற்குச் சென்று விவரங்களை அறிந்து கொண்டு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
