மின்சார ஆட்டோ வாங்குவதற்கு பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் நகைக்கடன் மற்றும் பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது. முதல்முறையாக வாகன கடன் பிரிவில் அரசு பணியாளர்களுக்கு மோட்டார் பைக் மற்றும் கார் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்குவதற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நடைபாண்டியர் ஆயிரம் பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு ஒன்பது சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
