குஷியோ குஷி..! வங்கிக்கணக்கில் ரூ.25000… இரவோடு இரவாக அறிவித்தார் முதல்வர் விஜய்…!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், நடப்பு ஆண்டில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை நேரடியாகச் செலுத்தப்படும். மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்கள் எவ்வித நிதி நெருக்கடியுமின்றி முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

தகுதிவாய்ந்த மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான நான் முதல்வன் போர்ட்டலில் (naanmudhalvan.tn.gov.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 19 முதல் தொடங்கி, வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தங்களை ஆயத்தப்படுத்தி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.