மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சற்றுமுன் அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் K.A.S. அவர்கள், தமிழகப் பெண்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரூ. 2,500 மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

   

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிப்பது ஆகிய முக்கியப் பணிகளில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதே சந்திப்பில், அதிமுகவினர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் ரீதியான கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.