நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதோடு ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அடுத்த வாரம் கிடைக்கும் 21வது தவணை தொகையான 2000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.
