தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாலா. இந்நிலையில் இவரது தந்தை ரவி இன்று (நவ., 14) உடல்நலக்குறைவால் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தனது ஓட்டுநர் பாலாவின் தந்தை இறந்த செய்தியை அறிந்த உதயநிதி அங்கு நேரில் சென்ற, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஓட்டுநர் பாலா உட்பட குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். இந்த மரணச் சம்பவம், துணை முதலமைச்சரின் உதவியாளரான பாலா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
