இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இவருக்கு 12 மில்லியன் பவுண்டுகள் மெகா லாட்டரி பரிசு விழுந்தது. பெரும் தொகையை வென்ற மகிழ்ச்சியில், கீத் உடனடியாக இந்தச் செய்தியைத் தனது தாயிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கீத்தின் தாய், அந்த லாட்டரி சீட்டை சரிபார்ப்பதற்காக லாட்டரி மையத்தில் உள்ள இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அதில் எந்தவித எச்சரிக்கை ஒலியும் வராததால், அந்தச் சீட்டிற்குப் பரிசு விழவில்லை எனத் தவறாக நினைத்து அதை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார். இதனால் பெரும் தொகைக்கு அதிபதியான பிறகும், கையில் லாட்டரி சீட்டு இல்லாததால் பரிசைப் பெற முடியாமல் கீத் பெரும் தவிப்பிற்கு ஆளானார்.
லாட்டரி சீட்டு கைநழுவிப் போனாலும், கீத் உடனடியாகத் தேசிய லாட்டரி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தான் வெற்றி பெற்ற சீட்டை வைத்திருந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து லாட்டரி நிர்வாகம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ரூ.153 கோடி பரிசுத் தொகை தமக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் கீத் காத்திருக்கிறார்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…