மத்திய அரசு, பிரதம மந்திரி விகசித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தை அதிகாரபூர்வமாக செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் அடுத்த 2 ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே. இத்திட்டத்திற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் நம் நாட்டின் வளர்ச்சியை படிப்படியாக உயர்த்தும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா கூறினார். இத்திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஊழியர்களுக்கான சலுகைகள்: இந்த சலுகை அரசு முதல்முறையாக வேலையில் சேர்ப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் , அத்தகைய ஊழியர்களுக்கு ஒன்றாக பணம் கிடைக்கும் என அரசு கூறியுள்ளது , இந்தத் தொகை சராசரி ஒரு மாத அடிப்படை ஊதியம் + டிஏ-க்கு சமமாக இருக்கும் அதன் அதிகபட்ச வரம்பு ரூ. 15,000 ஆகும் , அதனைப்போவே இந்தக் கட்டணம் இரண்டு தவணைகளாக கிடைக்கும் எனவும் கூறியுள்ளது , இந்தத் திட்டத்தின் மூலமாக பலன்களுக்கு தகுதி பெற ஊழியரின் மாதம் சம்பளம் ரூ.1லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என விதிமுறையுள்ளது .
முதலாளி /நிறுவனங்களுக்கான சலுகைகள்: புதிய வேலைகளை உருவாக்க நிறுவனங்களுக்கு அரசுசார்ப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும், ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மாதம்தோறும் 3000ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் , இந்த உதவித்தொகை பொதுத்துறைகளுக்கு 2 வருடங்கள் உற்பத்தி துறைக்கு 4 வருடங்கள் தொடரும்.
முக்கிய விதிகள்; அதனைப்போலவே நிறுவனத்தில் 50க்கும் குறைவான பணியாளர்கள் இருந்தால் குறைந்தது 2 புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட வேண்டும் கட்டாயம் . அன்நிறுவனத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் குறைந்தது 5 புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட வேண்டும் விதிகட்டாயம் . இந்த புதிய வேலைகளை குறைந்தபச்சம் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும். மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் UANஐ உருவாக்குவது கட்டாயம். UMANG செயலியை பயன்படுத்தலாம்.
