“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தை, இன்று (19.08.2025) சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கினர். முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் சாரந்தோர் தொழில் தொடங்க, 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்காக, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் மறுமணமாகாத கைம் பெண்கள், படை பணியின் போது இறந்த படை வீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படை வீரர்களின் மகன்கள், மணமாகாத/கணவனை இழந்த மகள்கள் என தகுதி உள்ள அனைவரும், இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையில், 30 % மூலதன மானியமும், 3 % வட்டி மானியமும் கிடைக்கும். முன்னாள் படை வீரர்களுக்கு, குறைந்தபட்ச வயது என்ற தகுதி இல்லை. இத்திட்டத்தில் இணைய விருப்புவோர், மத்திய/மாநில அரசால் வழங்கப்படும், இது போன்ற திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்றிருக்கக் கூடாது. அரசாணையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட, விவசாய நடவடிக்கைகள், அது சார்ந்த தொழில்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
