யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” வழங்கி கௌரவித்து வருகிறது. நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்புமிக்க விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியைத் தற்போது தமிழக அரசு நீட்டித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்காகத் தொடர்ந்து களத்தில் உழைத்து வரும் தகுதியுடைய தமிழக இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

   

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் இந்த விருது, இந்த ஆண்டும் வரும் 15.08.2026 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் நேரில் வழங்கப்படும். ஆண்டுதோறும் தலா 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு (மொத்தம் 6 நபர்கள்) இந்த விருது தனித்தனியாக வழங்கப்படும். இவவிருதிற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 1,00000/- (ஒரு லட்சம் ரூபாய்) ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களாக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 01.04.2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2026 அன்று 35 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும், கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதே சமயம், அரசுப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி கிடையாது.

 

இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முன்னதாக 06.07.2026 உடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது 13.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள சமூக ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.