“அச்சச்சோ யாரோட போன் இது?… மெட்ரோவில் ரூ.1 லட்சம் ஐபோன்… எடுத்த பெண் செய்த அதிர்ச்சி காரியம்… ஸ்தம்பித்த பயணிகள்…!”

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

ஒரு பெண் தனது இரு மகள்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் ரூ 85,000 முதல் ரூ 1 லட்சம் மதிப்புள்ள விலைமதிப்பற்ற ஐபோன் ஒன்று கீழே கிடப்பதை அவர் கண்டெடுத்தார். ஆனால், அந்த போனைத் தன் சுயநலத்திற்காக எடுத்துச் செல்ல அவருக்குச் சிறிதும் எண்ணம் வரவில்லை.

மாறாக, அவர் உடனே அங்கேயே ஒரு வீடியோ பதிவு செய்து, “இந்த போன் யாருடையதோ, அவர் நேரில் வந்து பெற்றுக்கொள்ளும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்” என்று கூறினார். அவர் நெடுநேரம் அங்கேயே காத்திருந்த நிலையில், அந்த போனுக்கு அழைப்பு வந்தது. தகவல் அறிந்து பதற்றத்துடன் ஓடிவந்த அந்த இளைஞரிடம், எந்தவித பேராசையுமின்றி அந்தப் பெண் ஐபோனைப் பத்திரமாக ஒப்படைத்தார்.

   

இதுவே உண்மையான நேர்மைக்குச் மிகச் சிறந்த சான்றாகும். சுயநலமும் பேராசையும் நிறைந்த இந்த உலகத்தில், இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதால்தான் இன்றளவும் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை குறையாமல் உயிர்ப்புடன் இருக்கிறது.