35 ஆண்டுகள் கழித்து கிடைத்த விடிவுகாலம்…! போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிய கொடூர ரவுடி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

ஹைதராபாத் சந்திராயன்குட்டா பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘இல்யாஸ் பின் ஹுசைன் யஃபாய்’ என்பவர் மீது கடந்த 1991-ஆம் ஆண்டு நடந்த கொடூரக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, ரவுடியை தேட தொடங்கியது. ஆனால், அதன்பின் போலீசாரின் பிடியில் சிக்காமல் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட கையோடு பிழைப்பு தேடுவது போல் வெளிநாட்டிற்குத் தப்பியோடிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியபோதும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, பெயிண்டிங் வேலை செய்து வந்தவாறே மறைந்து வாழ்ந்துவந்துள்ளார்.

   

35 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ரவுடி குறித்த ரகசியத் தகவல் சார்மினார் டாஸ்க் போர்ஸ் படையினருக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்துச் சிறப்புப் படையினர் அதிரடி வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த இல்யாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 35 ஆண்டுகளுக்குப் பின் அசாத்தியமாகச் செயல்பட்டுக் குற்றவாளியைப் பிடித்த அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.