வழிபாட்டு தலத்திற்குள் பாய்ந்த கார்…! பம்பரில் சிக்கி துடித்த 60 வயது மூதாட்டி… பலரின் நிலைமை கவலைக்கிடம்… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற சைனாடவுன் பகுதியில் அமைந்துள்ள குவான் யின் கோயிலில், சடங்குகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் ஒன்று திடீரென அதிவேகமாகப் பாய்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலுக்கு வழிபட வந்த முதியவர் ஒருவருக்கு, வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார். இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், கோயிலின் வளாகத்திற்குள் சுமார் 30 பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதியைக் நோக்கி பாய்ந்து சென்றது.

   

இந்த கோர விபத்தில் காரின் முன் பம்பருக்கு அடியில் சிக்கிய 60 வயது மூதாட்டி ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் 21 வயது கெர்ட்சாய் மற்றும் 27 வயது பெப்லோய் ஆகிய இருவர் உட்பட மூன்று நபர்கள் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டுத் தலத்தில் நடந்த இந்த நரநடுங்கும் விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.