இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) இணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த லீமா ரோஸ் மார்ட்டின், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான இவர், கடந்த 14 ஆண்டுகளாக அக்கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், 2012-ம் ஆண்டு முதல் கட்சியின் வளர்ச்சிக்காகத் தான் செய்த அர்ப்பணிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தியது, தேர்தல் காலங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது மற்றும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மார்ட்டின் அறக்கட்டளை மூலம் ஆற்றிய சேவைகள் எனத் தனது உழைப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு காலம் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டும், தனது உழைப்பு சமீபகாலமாக உதாசீனப்படுத்தப்பட்டதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண்கள் அரசியலில் மிளிர வேண்டும் என தான் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், கட்சியிலேயே ஒரு பெண்ணின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகவும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீமா ரோஸ் நேரில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது ஐஜேகே-வில் இருந்து அவர் விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து விலகினாலும் தனது மக்கள் சேவையும், அரசியல் பயணமும் தொடர்ந்து தொடரும் என அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…