தமிழ்நாடு பாஜகவின் செல்வாக்குமிக்க பதவியான மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் பிப்ரவரி 9, 2026 அன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 முதல் இந்தப் பொறுப்பில் இருந்த அவர், தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேறு பணிகளுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவ விநாயகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அண்ணாமலை தரப்பு முன்வைத்த புகார்களே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் முடியும் வரை, ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் கட்சியின் நிர்வாகப் பணிகளைக் கொண்டு வரவும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தற்போது தமிழக ஆர்.எஸ்.எஸின் அமைப்பு பொதுச்செயலாளர் பிரஷோப குமார், பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…