அந்தரத்தில் பறந்த கார்… நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

ருமோனியாவில் ஒரு மெர்சிடிஸ் ஓட்டுநர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்கள் மீது பறந்து சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், அந்த ஓட்டுனரின் கார் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் வழியாக நேராக ஒரு கண்காணிப்பு கேமரா கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பயங்கர சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர் 55 வயது உடையவர் என்றும் அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய விபத்தில் லேசான காயங்களுடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அதனால் அவர் மருத்துவமனைக்கு செல்லவும் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த விபத்தால் சாலையில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.