சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.
பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.
தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார்.
இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந் பாதியிலேயே விலகி விட்டார்.
தற்பொழுது புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்ததாக நளதமயந்தி என்ற பெயரில் புதிய சீரியலை களமிறக்க உள்ளது.
இந்த சீரியலில் தான் ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பிரியங்கா. இவர் தற்பொழுது தனது கணவருடன் 8 வது மாத திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைக்கூறி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…