ரகுவரனை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்.. முதல்முறையாக மனம் திறந்த ரோகினி..!

By Nanthini on மார்கழி 23, 2024

Spread the love

வில்லன் என்றாலே அது ரகுவரன் தான் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்தவர் தான் ரகுவரன். பிரபலங்களுக்கு வில்லனாக இவர் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. பாட்ஷா மற்றும் அண்ணாமலை என பெரும்பாலான ரஜினி படங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக பாட்ஷா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மலையாள படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்த தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் ரகுவரன் நிரூபித்தார்.

ஃபர்ஸ்ட் நாள் ஷூட்டிங் போகவே மாட்டாரு.. ரகுவரன் பற்றி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்  சொன்ன சீக்ரெட் | raghuvaran always not go in first day shooting

   

அதனைத் தொடர்ந்து அதே வருடம் 1982 ஆம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள் மற்றும் கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண்மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 8 வருடத்தில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

Actor Raghuvaran: மகன் கொடுத்த வலி.. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற  ரகுவரன்.. மகா கலைஞனை நொறுக்கிய திருமண முறிவு!

 

இந்த நிலையில் தங்களுடைய விவாகரத்து குறித்து ரோகினி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், எனக்கு 13 வயசு இருக்கும் அப்போ ரகுவரனுக்கு 24 வயசு. அப்பவே நண்பர்களாக நாங்க பேசி பழகிட்டோம். 13 வருஷம் கழிச்சு தான் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் ஏழு வருஷத்துல நிறைய நடந்துச்சு. ஒரு ரசிகையா ரகுவரனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதே சமயம் என் மகன் என் மூலம் கிடைத்ததால் ரகுவரனுக்கு என்னை மிகவும் பிடித்தது.

Rohini And Raghuvaran,രഘുവരന്റെയും രോഹിണിയുടെയും മകന്‍ വളര്‍ന്ന് വലുതായി  നായകനെ പോലെ ആയല്ലോ; അമ്മയ്ക്ക് ഒപ്പമുള്ള ഋഷിവരന്റെ പുതിയ ഫോട്ടോ ...

ஆனால் சில காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அதற்கான உண்மை காரணம் என்ன என்று என் மகனுக்கு மட்டும்தான் தெரியும். அதை நான் பொதுவெளியில் சொல்லவும் விரும்பவில்லை. நான் ஏதாவது சொல்லி அது தவறு என்று சண்டை போடுவதற்கு அவரே இங்கு இல்லை. அவர் பற்றி ஏதாவது சொல்லி அவருடைய பெயரை நான் களங்கப்படுத்த விரும்பவில்லை. நடந்த உண்மை எல்லாம் நடந்தது தான். அது எங்களுக்குள் தெரிந்த விஷயமாகவே இருந்துட்டு போகட்டும். என் மகனுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும் என்று ரோகிணி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.