#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரவி, முத்து ஒருபுறமும் மீனா, சுருதி, ரோகிணி மறுபுறமும் பணத்தை கொடுக்கல் வாங்கல் செய்வதை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி காணலாம்.
மீனா நேராக கார் செட்டுக்கு சென்று செல்வத்தை சந்திக்கிறாள். செல்வத்திடம் அண்ணா நாமெல்லாம் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்திருக்கோம். நமக்கெல்லாம் ஒரு லட்ச ரூபா அப்படிங்கறது பெரிய பணம்தான். ஆடம்பரத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் வித்தியாசம் இருக்கு. ஆடம்பரமா நம்ம இன்னைக்கு செலவு பண்ணிடலாம் நாள் முழுக்க கஷ்டப்பட்டு உடம்பு வலிக்க கார் ஓட்டி அந்த கடனையும் வட்டியும் அடைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகும். நீங்க யோசிச்சு பாருங்க. நீங்க என்ன தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே. ஒரு தங்கச்சியா தான் நான் உங்ககிட்ட சொல்றேன் அப்படின்னு பேசி விட்டு செல்கிறாள்.
மறுபுறம் ரோகிணி மனோஜிடம் பொய் மேல் பொய் கூறிக் கொண்டிருக்கிறாள். மனோஜ் உன் பிரண்டுக்கு நான் பணம் தர ரோகிணி ஆனால் நீ வட்டி வாங்கி கொடுத்துடு அப்படின்னு சொல்கிறான். ரோகினையும் சம்மதித்துவிட்டு அதோடு நிறுத்தி விடாமல் மறுநாள் வித்யாவை ஒரு நாடகம் செய்ய சொல்லி ஷோரூமுக்கு வர சொல்கிறாள். அம்மாவுக்கு ஆபரேஷன் என்று கூறி வித்யாவையும் 75 ஆயிரம் ரூபாயை மனோஜிடம் வாங்க வைக்கிறாள். இரண்டையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்து வித்யாவிடம் இந்த ஒரு லட்சத்தை அம்மா வீட்டு அட்வான்ஸ் கொடுத்துடு 75 ஆயிரம் க்ரிஷ் பீஸ் ஸ்கூல்ல கட்டிரு அப்படின்னு சொல்கிறாள். ஆனா இவ்வளவு பொய் மேல பொய் சொல்லிட்டு இருக்கே ரோகிணி நீ பெரிய ஆளுதான் அப்படின்னு வித்யா சொல்கிறாள். உடனே ரோகினி நான் எல்லா நேரமும் மனோஜ் கிட்ட பொய் சொல்ல மாட்டேன். ஒரு நாள் உண்மையை சொல்லத்தான் போறேன் அப்படின்னு சொல்கிறாள்.
அடுத்ததாக முத்து பணத்தை ரெடி செய்துவிட்டு கார் செட்டுக்கு சென்று செல்வத்திடம் இந்தாடா ஒரு லட்ச ரூபா நான் ரெடி பண்ணிட்டேன். நாளைக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணு அப்படின்னு சொல்கிறான். ஏற்கனவே செல்வம் தனது நண்பர்களிடம் என்னால் முத்துமீனா வாழ்க்கையில் பிரச்சனை வந்திடக் கூடாது அப்படின்னு பேசி வைத்திருந்தான். அதன் படி முத்துவிடம் இல்லடா பங்க்ஷன் எதுவுமே செய்யல அப்படின்னு சொல்கிறான். ஏன்டானு முத்து கேட்கிறான். உடனே இல்லடா நம்ம எல்லாம் கஷ்டப்பட்டவங்க நமக்கெல்லாம் அவ்வளவு பெரிய தொகை செலவு பண்ண முடியாது மத்தவங்க செஞ்சாங்கன்னா அவங்கள்ட்ட நிறைய காசு இருக்கு நான் இதனால கஷ்டப்பட்டு கடன் வாங்கி நான் செஞ்சு கடன் பட விரும்பல அப்படின்னு சொல்கிறான். உடனே முத்து என்னடா இப்படி சொல்ற நீ ஆசைப்பட்ட செஞ்சிடு அப்படின்னு சொல்கிறான். இல்ல முத்து இது சரிவராது என்று செல்வம் சொல்லிவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கின்றான். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு பேட்டி அளித்தால் தனது…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள…
தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை ஒட்டி, தமிழக…