தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு பேட்டி அளித்தால் தனது எம்.எல்.ஏ பதவியைத் துறக்கத் தயார் என அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அதிரடி சவால் விடுத்துள்ளார். தவெக ஆட்சி அமைக்கத் தான் ஆதரவு அளித்ததாக ஆளுநரிடம் விஜய் கடிதம் அளித்திருப்பது முற்றிலும் பொய் என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக அக்கட்சித் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவும் போலியானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளித்த காமராஜ், தன் மீதான புகார்கள் உண்மையானால் விஜய் நேரடியாகப் பேட்டி அளிக்கட்டும் என்றும், முடிந்தால் விஜய்யிடம் இது குறித்துப் பேட்டி எடுத்து உண்மையை நிரூபியுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளதால் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…
அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…