தேஜஸ்வி யாதவ் என்னை செருப்பால் அடிக்க வந்தார்… அரசியலை விட்டு விலகியது குறித்து ரோஹிணி பரபரப்பு குற்றசாட்டு…!!

By Soundarya on கார்த்திகை 16, 2025

Spread the love

தனது சகோதரர் தேஜஸ்வி யாதவ் தன்னை குடும்பத்திலிருந்து வெளியேற்றியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஒரு நாள் கழித்து, ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவின் மகள் ரோகிணி தனது உறவினர்கள் மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து வர கூறுகையில், “தனது தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி கொடுத்ததை பற்றி வீட்டில் சண்டை வெடித்தது.

சண்டையின்போது, தேஜஸ்வி யாதவ் தன்னை கொச்சையாக பேசியதாகவும், செருப்பால் அடிக்க வந்ததாகவும் ரோஹிணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கண்ணியத்தை காப்பதற்காகவே குடும்பத்தையும், அரசியலையும் விட்டு விலகுவதாக விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், ரோஹிணியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.