திடீர் திருப்பம்… அதிமுக, பாஜகவுடன் கூட்டணி… விஜய் கட்சி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் களம் தயாராகி வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என மும்முறமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதில் முக்கியமாக விஜய் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை பரபரப்பாகவே உள்ளது. மற்ற கட்சியின் கூட்டணியை விட தமிழக வெற்றிக்கழகம் உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக முக்கிய என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்ற பல வியூகங்கள் எழுந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி குறித்து பேசி உள்ளார். SIR ஐ எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க 0.1% கூட வாய்ப்பு இல்லை. விஜய் தான் முதல்வர் வேட்பாளர். அதனை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்போம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.